
நடிகரும், பிக்பாஸ் பிரபலமுமான கணேஷ் வெங்கட்ராமன், பிரபல தொகுப்பாளினியான நிஷாவை 2015ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த காதல் தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன், தான் மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளதாக நிஷா தெரிவித்திருந்தார். இந்நிலையில் நிஷாவிற்கு வீட்டிலேயே வளைகாப்பு நடந்துள்ளது.

இது தொடர்பான புகைப்படங்களை நடிகை நிஷாவீடியோவாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் அவர்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.