
புதுக்கோட்டை மாவட்டம் மஞ்சு விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் கலைமணி. இவருக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் இருந்த நிலையில் மூன்றாவதாக கருவுற்றிருந்தார். இந்நிலையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் கருவின் பாலினத்தை பரிசோதனை செய்துள்ளார்.
அப்போது மீண்டும் பெண் சிசுவாக இருந்ததால் கரு கலைப்பு செய்ய முடிவெடுத்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்கு கரு கலைப்பு சிகிச்சை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் மருத்துவர்கள் அவருக்கு தவறான சிகிச்சை வழங்கியதால் அவர் உயிரிழந்துள்ளார் என கூறப்படுகிறது. இதனால் அவரது உறவினர்கள் சம்பந்தப்பட்ட மருத்துவரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாலையில் அமர்ந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் உறவினர்கள் தனியார் மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் காவல்துறையினரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.