தமிழ் சினிமாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகமானவர். ஹன்சிகா மோத்வானி. அதன் பிறகு எங்கேயும் காதல், வேலாயுதம், சிங்கம் 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். இவர் தெலுங்கு சினிமாவிலும் நடித்து வருகிறார். இவருக்கு கடந்த 2022-ம் வருடம் மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் நடிகை ஹன்சிகா தற்போது ஆர்.கண்ணன் இயக்கத்தில் காந்தாரி என்ற பேய் படத்தில் நடித்துள்ளார். இதற்கு முன்பாக நடிகை ஹன்சிகா அரண்மனை, கார்டியன் உள்ளிட்ட பேய் படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது மீண்டும் அப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் காந்தாரி படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் வீடியோ தற்போது வெளியாகியுள்ள நிலையில் அதில் இது நான் காவல் காக்கிற இடம். இதில் யாருக்கும் அனுமதி இல்லை என்ற ஒரே ஒரு வாசகம் மட்டும் இடம் பெற்றுள்ளது. மேலும் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.