
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் நரேந்திர மோடி 3-வது முறையாக மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருடன் புதிய அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்ட நிலையில் கடந்த 10-ம் தேதி அமைச்சர்களின் இலாக்காக்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதில் உள்துறை அமைச்சராக அமித்ஷாவும், பாதுகாப்புத்துறை மந்திரியாக ராஜ்நாத் சிங்கும், வெளியிறவுத்துறை மந்திரியாக ஜெய்சங்கரும், நிதி மந்திரியாக நிர்மலா சீதாராமனும் பொறுப்பேற்றுக்கொண்டனர். இந்நிலையில் இன்று மத்திய நிதி மந்திரியாக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்றுக்கொண்டார். மேலும் கடந்த 2014 ஆம் ஆண்டு மந்திரியாக முதல் முறையாக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்ற நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நிதி மந்திரியாக அவர் நியமிக்கப்பட்ட நிலையில் தொடர்ச்சியாக மீண்டும் அவர் நீதி மந்திரியாக பொறுப்பேற்றுள்ளார்.