தமிழக பகுதிகளின் மேல் நிலவும் ஒரு வளிமண்டல‌ கடந்த சில நாட்களாக பல மழை பெய்து வருகிறது. குறிப்பாக வருகிற 18-ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. அதன் பிறகு இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. மேலும் இன்றும் நாளையும் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் 12 முதல் 20 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பொழிய வாய்ப்பு உள்ளது. மேலும் இதன் காரணமாக தமிழகத்திற்கு 2 நாட்களுக்கு  கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.