
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி, தனது வயதைக் பொருட்படுத்தாமல் மீண்டும் மைதானத்தில் மின்னல் வேகத்தில் காட்டி ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் அதிரடி தொடக்க வீரர் பில் சால்ட், 16 பந்துகளில் ஒரு சிக்ஸும், 5 பவுண்டரிகளும் அடித்து 32 ரன்கள் எடுத்திருந்தார். அந்த வேகத்தை தடுத்தது தோனியின் அதிரடி ஸ்டம்பிங். நூர் அஹ்மத் வீசிய கூக்ளி பந்தை விளாச பவுண்டரி அடிக்க முயன்ற போது, சில சென்டிமீட்டர்கள் வெளியில் வந்த பில் சால்ட், மீண்டும் க்ரீஸுக்குள் வர முயன்ற நேரத்தில் தோனி மின்னலை விட வேகமாக ஸ்டம்பிங் செய்தார்.
இந்த நம்ப முடியாத காட்சி மைதானத்தில் ஒரு நிமிடம் மௌனத்தை உருவாக்கியது. பின்னர், 3வது நடுவர் ரீபிளே பார்த்தபோது, பில் சால்ட் கால் காற்றில் இருக்கும்போது ஸ்டம்பிங் நடந்தது உறுதி செய்யப்பட்டது. இதனுடன் சிஎஸ்கேக்கு முதன்மையான விக்கெட் கிடைத்தது. அண்மைய போட்டியில் சூர்யகுமார் யாதவை மின்னல் வேகத்தில் வெளியேற்றிய தோனி, இப்போது பில் சால்ட் விக்கெட்டையும் அதைவிட வேகமாக வீழ்த்தி, தனது அசாத்திய திறமையை மீண்டும் நிரூபித்துள்ளார். 43 வயதிலும் அவரது அற்புதமான விளையாட்டு ரசிகர்களை மயக்க வைத்தது.
Fast
Faster
MS Dhoni#CSKvRCBpic.twitter.com/9j1tbnE8qi— Vɪᴘᴇʀ⁶⁵ (@repivxx65_) March 28, 2025