உத்தரகாண்டில் கட்டுமான பணியின் போதே இரண்டாவது முறையாக மேம்பாலம் ஒன்று இடிந்து விழுந்தது. அதாவது ஜூலை மாதம் 2022-ல் உத்தரகாண்டில் மேம்பாலம் ஒன்று முதல் முறையாக இடிந்து விழுந்தது. இதனால் 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து  கடந்த வியாழக்கிழமை அன்று மாலை 5 மணியளவில் மீண்டு மேம்பாலம் ஒன்று இரண்டாவது முறையாக இடிந்து விழுந்தது.

இந்த சம்பவத்தால் அதிர்ஷ்டவசமாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இதனையடுத்து மேம்பாலத்தின் உயரம் மற்றும் அதிக எடையின் காரணமாக மேம்பாலமானது இடிந்து விழுந்திருக்கலாம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.  மேலும் இந்த மேம்பாலத்தின் நீளமானது 110 மீட்டரும், 40 மீட்டர் உயரத்திலும் கட்டப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.