இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி கிரிக்கெட்டில் பல சாதனைகளை செய்து உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானவராக இருக்கிறார். இவரை instagram கணக்கில் ரொனால்டோ மற்றும் மெஸ்ஸிக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள். இந்நிலையில் தற்போது இந்தியாவின் மதிப்புமிக்க பிரபலங்கள் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில் அதில் விராட் கோலி மீண்டும் முதலிடத்தை பிடித்து சாதித்துள்ளார். இந்த பட்டியல் அவர்களின் பிராண்ட் மதிப்புகளை பொறுத்து வெளியிடப்படும்.

இதில் விராட் கோலியின் பிராண்ட் மதிப்பு 227.9 மில்லியன் டாலர் உயர்ந்துள்ளதால் அவர் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். அதன் பிறகு 203.1 மில்லியன் டாலர் மதிப்புடன் நடிகர் ரன்வீர் சிங் 2-ம் இடத்தையும், நடிகர் ஷாருக்கான் 120.7 மில்லியன் டாலர் மதிப்புடன் 3-ம் இடத்தையும் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் எம்எஸ் தோனி 7-வது இடத்தில் இருக்கிறார். இவருடைய மதிப்பு 95.8 மில்லியன் டாலர் ஆகும். மேலும் இவரைத் தொடர்ந்து சச்சின் டெண்டுல்கர் 8-ம் இடத்தில் இருக்கிறார். இவருடைய மதிப்பு 91.3 மில்லியன் டாலர் ஆகும்.