பீகார் மாநிலத்தில் உள்ள கிஷான் கஞ்ச் மாவட்டத்தில் 2 கிராமங்களை இணைக்கும் வகையில் ஒரு பாலம் அமைந்துள்ளது. இந்த பாலம் பகதுர்கஞ்ச் பகுதியில் உள்ள மதியா ஆற்றின் மீது உள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு இந்த பாலம் திறக்கப்பட்ட நிலையில் நேற்று காலை இந்த பாலம் திடீரென இடிந்து விழுந்தது.

இதில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த பாலம் கனமழையின் காரணமாக ஆற்றின் நீரோட்டம் அதிகரித்ததால் திடீரென இடிந்து விழுந்ததாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதோடு பாலத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதே போன்று பீகாரில் கடந்த வருடம் ஒரு பாலம் இடிந்து விழுந்த நிலையில் நடப்பாண்டில் மட்டும் சிவான் மற்றும் கிழக்கு சாம்பராண் மாவட்டங்களுக்கு இடையே புதிதாக கட்டப்பட்ட பாலம் உட்பட அடுத்தடுத்து 3 பாலங்கள் இடிந்து விழுந்தது. மேலும் இதைத் தொடர்ந்து தற்போது 4-வது முறையாக பாலம் இடிந்த நிலையில் தர மற்ற பொருள்களால் கட்டப்பட்டது தான் இதற்கு காரணம் என உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.