மீனம் ராசி அன்பர்களே,
இன்று காலையில் நீங்கள் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பணவரவு திருப்தியை ஏற்படுத்தி கொடுக்கும். இனிய உறவுகள் மேம்படும். நல்ல விஷயங்கள் நடைபெறும். பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படலாம். திறமைகள் வெளிப்படும். ஆனந்தமான வாழ்விற்கு அடித்தளம் அமைத்துக் கொள்வீர்கள். திருமண முயற்சிகளை மேற்கொள்ளுங்கள் வெற்றி கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும்.
காரியங்களை அற்புதமாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத பதவி உயர்வு கிடைக்கும். நேர்மையுடன் நடந்து கொள்வீர்கள். பெண்கள் இன்று ஏற்றத்தாழ்வு இல்லாமல் அனைவரிடமும் சமமாக பழகுவீர்கள். அக்கம் பக்கத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள். உணர்ச்சிவசப்பட வேண்டாம். கோபப்பட வேண்டாம்.
மனதில் மகிழ்ச்சி ஏற்படும். இன்று மாணவர்கள் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். படிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. தடைகளை உடைத்து எறிந்து கல்வியில் ஜெயிக்க வேண்டிய சூழல் இருக்கும். இன்று எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வைத்துவிட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு
அதிர்ஷ்ட எண்: ஆறு ஏழு மற்றும் ஒன்பது
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்