மீனம் ராசி அன்பர்களே,

இன்று மிகவும் மகிழ்ச்சி மிக்க நாளாக அமையும். நட்பின் பெருமையை உணர்ந்து செயல்படுவீர்கள். எதிர்கால வாழ்வில் நம்பிக்கை அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். தாராள பண வரவு ஏற்படும்.

எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கடினமான உழைப்பு தேவை. புதிய ஆர்டர்கள் கிடைக்க பெற்று மனமகிழ்ச்சி அதிகரிக்கும். சிறப்பான செயல்பாடுகள் வெற்றியை கொடுக்கும். சில சமயத்தில் நல்லது செய்ய பொய் கெட்டதாக மாறிவிடும். இழுபறியான காரியங்களில் முன்னேற்றம் இருக்கும். சின்ன விஷயத்திற்கும் கோபம் படுவீர்கள்.

கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. பெண்கள் சமையலின் போது கவனமாக இருங்கள். கூர்மையான பொருளை கவனமாக கையாள வேண்டும். நினைத்த வாழ்க்கையை அமைத்துக் கொள்வீர்கள். கேட்ட இடத்தில் பண உதவி கிடைக்கும்.

இன்று மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற முடியும். உயர் கல்வி சிறப்பாக அமையும். தேர்வில் அதிக மதிப்பெண்கள் கிடைக்கும். இன்று சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்: மூன்று மற்றும் ஏழு

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்