மீனவர் விவகாரத்தில் மனிதாபிமான நடவடிக்கை தேவை என இலங்கை அதிபரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். பிரதமர் மோடி, இலங்கை அதிபர் சந்திப்பிற்கு பின்னர் இந்தியா இலங்கை இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

பாதுகாப்பு, சுகாதாரம், மருந்து துறைகளில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியா, இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் இடையே முத்தரப்பு ஒப்பந்தமும் கையெழுத்து ஆனது.