தெலுங்கு திரையுலகின் இளம் நடிகராகன நாகசெய்தன்யா சமீபத்தில் இரண்டாவதாக சோபிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் தற்போது தண்டேல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இவருடன் கதாநாயகியாக சாய்பல்லவி நடித்து வருகிறார்.

மீனவ சமுதாயத்தை மையமாக வைத்து இந்த கதை உருவாகி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் படப்பிடிப்பு நடந்த பகுதியில் நாக சைதன்யா சில மீனவர்களுடன் சேர்ந்து ஆற்றில் மீன்பிடித்து அதனை அவரே சமைத்துள்ளார்.

பின்னர் தான் வைத்த மீன் கறியை படகுழுவினருக்கும் அப்பகுதியை சேர்ந்த மக்களுக்கும் பரிமாறி அவர்களுடன் சேர்ந்து உணவருந்தி உள்ளார். இது நாகசைய்தன்யாவின் திருமணத்திற்கு அவர் வைத்த விருந்து என்று தண்டேல் பட குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.