மீன ராசி அன்பர்களே,
இன்று எதிர்ப்புகளை எல்லாம் சமாளித்து வெற்றி காணும் வாய்ப்புகள் உருவாகும். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். உயர் அதிகாரிகளின் பாராட்டுக்கள் கிடைக்கப்பெறும். பணவரவு தாராளமாக இருக்கும். வாக்கு வன்மையால் லாபம் அதிகரிக்கும். தேவையற்ற அலைச்சல் ஏற்படக்கூடும். இடமாற்றம் ஏற்படும் சூழல் உள்ளது.
வெற்றிக்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. நன்மைகள் உங்களைத் தேடி வரும். சுலபமாக பணிகளை முடித்து காட்டுவீர்கள். எல்லோரிடத்திலும் நல்ல பெயர் கிடைக்கும். கோபமான பேச்சை தவிர்ப்பது நல்லது. பெண்கள் இன்று ஓய்வாக காணப்படுவீர்கள் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக விளையாடுவீர்கள்.
இன்று மாணவர்கள் எதார்த்தமாக நடந்து கொள்வீர்கள். பெரியவர்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிஷ்ட எண்: 3, 5 மற்றும் 7
அதிஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்