மத்தியப் பிரதேசத்தில், குவாலியரில் சாலை ஓரமாக மொமோஸ் கடை வைத்து நடத்தி வருபவர் ஷொஹைல் ஷா. கணவன் மனைவி இருவரும் சேர்ந்து இந்த மோமோஸ் கடையை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் ஷொஹைல் மீது Fevikwik Gum நிறைந்த பாட்டிலை வீசி சென்றுள்ளனர்.

இதில் ஷொஹைலின் கண் மற்றும் உதடு ஒட்டிய நிலையில் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து ஷொஹைலின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.