இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி மற்றும் குடும்பத்தார் மும்பையில் 15000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்களாவில் வசிக்கின்றனர். ஆன்டிலியா என்று அழைக்கப்படும் இந்த வீடு 27 மாடிகளைக் கொண்டது. 37,000 சதுர மீட்டர் பரப்பளவில் 168 கார் கேரேஜ், 9 அதிவேக லிஃப்ட், 50 இருக்கை தியேட்டர், மொட்டை மாடி தோட்டங்கள், நீச்சல் குளம், ஸ்பா, ஹெல்த் சென்டர் மற்றும் கோவில் உள்ளது. ஆன்டிலியாவின் கட்டுமானம் 2006-ல் தொடங்கி 2010-ல் முடிவடைந்தது.