
TNPSC Group 4 Exam: தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வு நாளை (ஜூன் 9) நடைபெறவுள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகிறது.
தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், வனக் காப்பாளர் உள்ளிட்ட பணிகளில் உள்ள 6,244 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு நாளை நடைபெறவுள்ளது. தமிழகம் முழுவதும் சுமாா் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் இத்தோ்வை எழுத விண்ணப்பித்துள்ளனா். இந்த தேர்வின் முடிவுகள் ஏற்கெனவே அறிவித்தபடி ஜனவரி 2025-ல் வெளியாகும்.
தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு: தேர்வு எழுத வருபவர்கள் தேர்வுக்கூடத்தினுள் செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை , கருப்பு பந்துமுனை பேனாவினால் மட்டுமே தோ்வு எழுத வேண்டும்.