திருவண்ணாமலை மாவட்டத்தில் தனியார் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முக்தி அடைய போவதாக அவர்கள் எழுதி வைத்த கடிதம், வீடியோ பதிவு ஆதாரம் கிடைத்துள்ளது. இது குறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று விசாரணை நடத்திய போது தற்கொலை செய்து கொண்டவர்கள் சென்னையை சேர்ந்த மகாகாலவியாசர், அவரது மனைவி ருக்மணி, மகள் ஜலந்தரி(17), மகன் முகுந்த் ஆகாஷ் குமார்(15) என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.