விழுப்புரத்தில் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்த காதலனுக்கு காதலி தேநீரில் எலி மருந்தை கலந்து கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணும் வாலிபரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் திருமணம் செய்ய காதலன் மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த காதலி தனது காதலனுக்கு தேநீரில் எலிமருந்தை கலந்து கொடுத்துள்ளார்.

அதன்பிறகு முடிந்தால் உன்னை காப்பாற்றிக்கொள் என வாட்ஸ் அப்பில் காதலி மெசேஜ் அனுப்பியுள்ளார். இதனை பார்த்து பதறிப்போன காதலன் தனது குடும்பத்தினரிடம் விஷயத்தை கூறியுள்ளார். அவர்கள் வாலிபரை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு வாலிபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.