
சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் கீதாஜீவன், கூடுதல் பெண் குழந்தைகள் பயனடைய, CMன் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் மறுசீரமைக்கப்படும். குழந்தைகளின் வளர்ச்சியை கண்காணிக்கும் வகையில் 18,573 குழந்தைகள் மையங்களுக்கு ₹14.85 கோடி மதிப்பில் வளர்ச்சி கண்காணிப்பு கருவிகள் வழங்கப்படும்.
சத்துணவு மையங்களுக்கு ரூ.25.70 கோடி செலவில் 17,312 அரசுப்பள்ளிகளுக்கு புதிய சமையல் உபகரணங்கள் வழங்கப்படும். சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின்கீழ், நவீன உயர்ரக தையல் இயந்திரங்கள் வழங்கப்படும் என்று கூறியதோடு மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகையை உயர்த்தி வழங்க கூடுதலாக 37 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் கூறினார்.