
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதால் 27 சுற்றுலா பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் பாதுகாப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
அதன்படி இந்தியா-பாகிஸ்தான் எல்லையான அட்டாரி- வாகா மூடப்பட்டது. பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் மே ஒன்றாம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் தற்போது பாகிஸ்தான் அரசு இந்திய தூதரகத்திற்கு சம்மன் அனுப்பியுள்ளது.
இஸ்லாமாபாத்தில் இருக்கும் இந்திய பொறுப்பு தூதர் கீதிகா ஸ்ரீவத்சாவுக்கு பாகிஸ்தான் சம்மன் அனுப்பியுள்ளது. டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக உயர் அதிகாரி சாத் அகமது வார்ரைச்சுக்கு இந்தியா சம்மன் அனுப்பிய நிலையில் இந்திய தூதரகத்திற்கு பாகிஸ்தான் அரசு சம்மன் அனுப்பியுள்ளது