
ராமநாதபுரம் மாவட்டம் ஆதனக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் கவிநாத்(31). இவர் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை கவிநாத் காதலித்து வந்தார். ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண் திடீரென தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த கவிநாத் யாரிடமும் பேசாமல் தனிமையில் இருந்துள்ளார்.
நேற்று மதியம் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கவிநாத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கவிநாத்தின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.