
தேவநாதன் கைது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், மயிலாப்பூர் இந்து சாசுவாத நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளவர்கள் அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. அதேசமயம் திமுக அரசின் சட்ட ஒழுங்கு மற்றும் நிர்வாக தோல்வியை சுட்டிக்காட்டும் பாஜக கூட்டணி கட்சிகளை அச்சுறுத்தும் முயற்சிகளில் இதுவும் ஒன்று என்றால் அதனை வன்மையாக கண்டிக்கிறோம் என்று அண்ணாமலை பதிவிட்டுள்ளார்