
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக அரசுக்கு தற்போது ஒரு முக்கிய கோரிக்கையை விடுத்துள்ளார். அதாவது கன்னியாகுமரி மாவட்டத்தில் செறுகோள் பகுதி உள்ளது. இங்கு ஒரு நான்கு வழிச்சாலை அமைப்பதற்காக மலை குன்றுவை உடைப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இதற்கான அனுமதியை TTK construction நிறுவனம் பெற்றுள்ளது. அந்த நிறுவனம் உண்மைக்கு புறம்பான ஆவணங்கள் மூலம் மலைக்குன்றை வருவதாக கூறப்படுகிறது. இதற்கு நாம் தமிழர் கட்சி கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறது. அவர்கள் கிட்டத்தட்ட 56 ஆயிரம் கன மீட்டர் மண்ணை வெட்டி எடுத்து சாலை அமைக்க திட்டமிட்டுள்ளனர்.
அந்த மலைக்குன்று அப்பகுதியில் விவசாயம், நீர்வளம் உள்ளிட்ட பல்வேறு இயற்கை வளங்களுக்கு உதவிகரமாக இருப்பதோடு மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த மலைக்குன்று அமைந்துள்ள பகுதியில் இருந்து 300 மீட்டர் தொலைவுக்குள் ஏராளமான குடியிருப்புகள் அமைந்துள்ளது. அங்கிருந்து பாறைகளை உடைத்து எடுக்கும் போது நிலச்சரிவு ஏற்படுவதற்கான அபாயம் இருக்கிறது. அதோடு பாறைகளை உடைக்கும் ஏற்படும் அதிவினால் வீடுகள் பாதிக்கப்படுவதோடு மக்களுக்கும் சுகாதார பிரச்சனைகள் ஏற்படும். அந்த கனிம வளங்களை கடத்துவதற்காக கனரக வாகனங்களை பயன்படுத்துகிறார்கள். இதனால் வீடுகள் மற்றும் குறு சாலைகள் பாதிப்படைய வாய்ப்பு உள்ளது.
இது தொடர்பாக உள்ளாட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை நாம் தமிழர் கட்சியினர் மனு கொடுத்த நிலையில் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்துவிட்டு வெறும் வாய்மொழியாக தடுத்து நிறுத்துவதாக கூறிவிட்டு சென்று விட்டனர். அண்மையில் கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் தமிழ்நாட்டிலும் அதுபோன்று ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே இனியும் தமிழக அரசு இதனை வேடிக்கை பார்த்தால் அது வருங்கால தலைமுறையினருக்கு செய்யும் பச்சை துரோகம் ஆகும். மேலும் தமிழக அரசு இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.