விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் இன்று மது ஒழிப்பு மாநாடு நடத்தி வரும் நிலையில் மதுவிலக்கை தேசியமயமாக்குவது அவசியம் என்று வலியுறுத்தினார். இந்நிலையில் தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்துவது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் கூறியதாவது, நம்முடைய அண்டை மாநிலங்களில் மதுவிற்பனை நடைபெறும் போது தமிழ்நாட்டில் மட்டும் மதுவிலக்கை கொண்டு வருவது சாத்தியமாகாது. பூரண மதுவிலக்கை கொண்டு வர ஒருமித்தமாக அனைத்து மாநிலங்களும் ஒப்புக்கொண்டால் கண்டிப்பாக தமிழ்நாட்டிலும் கொண்டுவரப்படும் என்று கூறினார். மேலும் ஆளுநர் அரசியல்வாதி போல் செயல்படுகிறார் என்றும் ராஜ் பவனை அவர் அரசியல் பவனாக மாற்றி வருகிறார் என்றும் விமர்சித்தார்.