நடிகர் விஜய் கட்சி தொடங்கி ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. வருகிற 2026 ஆம் வருடம் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார். இதனால் இப்போதிலிருந்து அதற்கான வேலைகளில் இறங்கி விட்டார். தமிழகத்தில் ஆளுங்கட்சி மற்றும் மத்தியில் ஆளும் கட்சி என இவர்களுக்கு எதிரான கருத்துக்களை பரப்பி வருகிறார். இதுவரை பத்திரிகையாளர்களை சந்திக்காத விஜய் எப்போது அவர்களை சந்தித்து பேச போகிறார்? என்பது குறித்து தான் பலரும் பேசி வருகிறார்கள். இந்த நிலையில் நடிகர் விஷாலிடம் பத்திரிக்கையாளர்கள் விஜய் குறித்து ஒரு கேள்வியை கேட்டுள்ளார்கள்.

அதற்கு விஷால் கடுப்பாகி ஒரு பதில் சொல்லியுள்ளார். அதாவது விஷாலிடம் விஜய் கட்சி தொடங்கி ஒரு வருடத்திற்கு மேலாகிறது. ஆனால் இன்னும் அவருடைய கருத்துக்களை மறைமுகமாக சொல்கிறார். அது மட்டுமல்ல ஆளும் கட்சி, மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களை மறைமுகமாகவே சொல்லிக் கொண்டு வருகிறார். இவருடைய அரசியல் பார்வை எப்படி இருக்கிறது? என்று சொல்லுங்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த விஷால், முதலில் செய்தியாளர்களை வந்து அவர சந்திக்க சொல்லுங்க. அவரிடம் கேட்கிற கேள்வியை என்கிட்ட கேக்குறீங்க” என்று கூறியுள்ளார்.