தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் தீர்வு கிடைக்காத நிலையில் முதல்வரின் தனி பிரிவுக்கு பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய மனுக்களை அனுப்புகின்றனர். அவற்றின் மீதான நடவடிக்கையை முறைப்படுத்துவதற்கு முதல்வரின் முகவரி என்ற திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் நேரடியாகவும் தபால் மற்றும் ஆன்லைன் முறையிலும் பெறப்படும் மனுக்கள் முறையாக பதிவு செய்யப்பட்டு முதல்வரின் தனிப்பிரிவு மூலமாக சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்படுகின்றது.

ஆன்லைன் முறையில் அனுப்பப்படும் மனுக்கள் தொடர்பாக அந்தந்த துறைகள் முதல்வரின் தனிப்பிரிவுக்கு பதில் அளிக்க வேண்டும். ஆனால் சில குறிப்பிட்ட துறைகள் இதற்கான பதிலை அனுப்புவதில்லை என்று மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். தற்போது வரை ஏராளமான மனுக்கள் நிலுவையில் உள்ள நிலையில் முதல்வரின் முகவரி திட்டத்தில் வீட்டு வசதி நகர்ப்புற வளர்ச்சி துறை மற்றும் பதிவுத்துறைக்கு பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டன. அவற்றின் மீதான நடவடிக்கை குறித்த பதிலை முதல்வரின் முகவரி இணையதளத்தில் உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என்று துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.