தமிழ்நாடு முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் 2024 இல் பங்கேற்பதற்கான இணையதளம் முன்பதிவு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். 2024 தொடரில் புதிய விளையாட்டுகள் சேர்க்கப்பட்டு பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என ஐந்து பிரிவுகளாக 27 விளையாட்டுகள் 53 வகைகளில் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் செப்டம்பர் மற்றும் அக்டோபரில் நடத்தப்பட உள்ளது.

இந்த போட்டிகளில் கலந்து கொள்வதற்கான விவரத்தை www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக முன்பதிவு செய்து அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பித்து பதிவேற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் இந்த போட்டிகள் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.