
தமிழகத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மே 14ஆம் தேதி அதாவது இன்று காலை 11 மணிக்கு காணொளி மூலம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று திமுக தலைமையகம் தெரிவித்துள்ளது. அதே சமயம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மக்கள் அவை தேர்தல் பணிகள் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.