
கரூர் மெயின் ரோட்டில் பெண் ஒருவர் முழு மதுபோதையில் அமர்ந்து கொண்டிருந்தார். அவர் வாயில் வந்த வார்த்தைகளை பேசி போலீசாரை சிரமப்படுத்தியுள்ளார். அந்த பெண் தான் சென்னையில் வேலை பார்ப்பதாகவும், நேராக முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்க்கே போய் விடுவேன் எனவும் கூறி போலீசை தொந்தரவு செய்தார். இதனையடுத்து முதல்வர் ஸ்டாலின் வீடு தனக்கு தெரியாதா? என போலீசை பார்த்து கேள்வி எழுப்பிய பெண் அவனை பிடிக்க வேண்டும் என்று உளறினார்.
அவர் யாரோ ஒருவரால் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து தன்னை வேடிக்கை பார்த்தவர்களையும் அந்த பெண் திட்டி உள்ளார். அங்கு நின்று கொண்டிருந்தவர்களை கிளம்புங்கள் என கூறியுள்ளார். கடைசியாக போலீசார் அந்த பெண்ணை ஆட்டோவில் ஏற்றி பத்திரமாக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.