
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியை சேர்ந்த டிரைவர் ஒருவர் முதல் மனைவிக்கு குழந்தை இல்லை என்று கூறி அவரை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது திருமணம் செய்வதற்காக பெண் தேடியுள்ளார். புரோக்கர் மூலமாக இரண்டாவது திருமணம் செய்வதற்கு பெண் கிடைத்துள்ளது. அண்மையில் இந்த பெண்ணை திருமணம் செய்த அவர் திருமணம் முடிந்து மறுநாள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தனது மனைவியை அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது தனக்கு வந்த செல்போன் அழைப்பை எடுத்து பேசிக் கொண்டிருந்தபோது அவருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு அந்த பெண் நகை மற்றும் பணம் என அனைத்தையும் சுருட்டிக்கொண்டு ஓடியுள்ளார். ஆனால் இது தொடர்பாக அந்த நபர் ஏதும் புகார் அளிக்கவில்லை என்று தெரிகிறது.