
தமிழக வெற்றி கழகத்தின் செயல்பாடுகள் தொண்டர்களுக்கு புதிய உத்வேகத்தை கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலை குறிக்கோளாக வைத்து செயல்பட்டு வரும் தமிழக வெற்றி கழகம் தனது முதல் மாநாட்டை செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடத்த இருக்கிறது. இந்த மாநாட்டில் 10 லட்சம் பேர் பங்கேற்க இருப்பதாகவும் அதற்கேற்ப வசதிகள் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் கட்சியின் கொடியையும் விஜய் அவர்கள் அறிமுகப்படுத்த இருக்கிறார். கொடி அறிமுகப்படுத்தப்பட்டு 40 அடி உயர கொடி கம்பத்தில் நிறுவப்பட இருக்கிறது. இவ்வாறு கட்சி கொடியை அறிமுகப்படுத்துவது, மாநாட்டுப் பணி என தமிழக வெற்றி கழகம் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருவது கட்சி தொண்டர்களிடையே வேகத்தை கொடுத்துள்ளது.