இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் முதலாவது டி20 போட்டி இலங்கையின் பல்லகலேவில்  நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து முதலில் களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜெய்ஸ்வால் 40(21) ரன்களிலும் , சுப்மன் கில் 34(16) ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனைத் தொடர்ந்து 74/2 என்ற நிலையில் அடுத்ததாக ரிஷபண்ட் ,சூர்யகுமார் களம் இறங்கினர். சூர்யகுமார் அதிரடியாக விளையாடி 58(26) ரன் எடுத்தநிலையில் பதிரனா வீசிய பந்தில் lbw ஆகி தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 13.2 ஓவர்களில் 150/3 ஆக இருந்தது. ஹர்டிக் பாண்டிய 9(10) ரங்களில் பதிரனா வீசிய பந்தில் போல்ட் ஆனார். பராக் 7(6) எடுத்தநிலையில் பதிரான பந்தில் LBW ஆனார். இருப்பினும் அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட 49(32) எடுத்த நிலையில் பதிரான பந்தில் அவுட் ஆகி தனது அரை சதத்தை தவறவிட்டார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 213 ரன்கள் எடுத்தது. இலங்கை பந்து வீச்சாளர் பதிரனா அதிகபட்சமாக 4 விக்கெட் வீழ்த்தினார்.

இந்திய அணி நிர்ணயித்த 214 என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான குசால் மெண்டீஸ் , நிசங்கா ஜோடி அதிரடியாக விளையாடி ரன் ரேட்டை உயர்த்தினர். இருப்பினும் 84 ரன்கள் இருந்த நிலையில் மெண்டிஸ் 45 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். நிசாங்கா அதிரடியாக விளையாடி 79 ரன்கள் சேர்த்தாலும் அதற்கு பின் வந்த ஆட்டக்காரர்கள் நிலைத்து ஆடாமல் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

 

இறுதியில் இலங்கை அணி 19.2 ஓவர்களில் 170 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. இதனால் இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வென்றது. இந்திய அணியின் சார்பில் பராக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.அர்ஷீப் சிங், அக்சார் படேல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.