
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் கரூரில் ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அபகரித்ததாக புகார் எழுந்தது. எம்.ஆர். விஜயபாஸ்கர், அவரது தம்பி சேகர் உள்ளிட்ட 13 பேர் மீது வாங்கல் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இடைக்கால முன்ஜாமீன் மனு மீது இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட இருக்கிறது.
இந்த மனுவை விசாரித்த கரூர் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சண்முகசுந்தரம் இன்று உத்தரவு பிறப்பிக்கஇருக்கிறார் . ஏற்கனவே முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இடைக்கால முன்ஜாமின் கோரி மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.