
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமினுக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது. வழக்கின் விசாரணை முடியும் வரை அவர் எந்த அரசுப் பதவியும் ஏற்கக் கூடாது என அமலாக்கத்துறை வாதம் செய்தது.
வழக்கு முடிய 15 ஆண்டுகள் ஆகலாம். அதற்காக, எந்த பதவியும் வகிக்க முடியாது என உத்தரவிட முடியாது என செந்தில் பாலாஜி தரப்பு வாதம் செய்தது. அப்போது நீதிபதிகள் அமைச்சர் பதவி வேண்டுமா ஜாமீன் வேண்டுமா என்பதை முடிவு செய்யுமாறு கால அவகாசம் கொடுத்தனர். இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததால், அவரது ஜாமீனுக்கு எதிரான வழக்குகளை உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது.