காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் ராஜ்யசபா எம்பியுமான டி. ஸ்ரீனிவாஸ் காலமானார். ஹைதராபாத்தில் உள்ள அவருடைய வீட்டில் அதிகாலை 3 மணியளவில் அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திடீர் மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இவர் ஒருங்கிணைந்த ஆந்திராவில் அமைச்சராகவும், எம்பியாகவும், பிசிசி தலைவராகவும் பணிபுரிந்துள்ளார். தற்போது அவரது இரண்டாவது மகன் அரவிந்த் நிஜாமாபாத் எம்பியாக இருக்கிறார். மூத்த மகன் சஞ்சய் முன்பு நிஜாமாபாத் மேயராக பணியாற்றியுள்ளார்.