முன்னாள் கிரிக்கெட் வீரர் அனுஷுமான் கெய்க்வாட் உடல் நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரத்த புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அனுஷுமான் கெய்க்வாட்(71) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 12 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடிய இவர் 1983 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக 21 ரன்கள் எடுத்தார்.

இவரது உடல்நிலை குறித்து அறிந்த கவின் தேவ்  உட்பட பல முன்னாள் வீரர்கள் சிகிச்சைக்காக பண உதவி செய்து வந்தனர். பிசிசிஐ சார்பாக இவருடைய சிகிச்சை செலவுக்காக ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்த இவருடைய மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்