
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி. சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பரான இவர் அவரது காலகட்டத்தில் மிகப்பெரிய கிரிக்கெட் வீரராக போற்றப்பட்டார். இவர் இந்திய அணிக்காக 104 ஒரு நாள் போட்டிகளிலும் 17 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். 10000-க்கும் அதிகமான ரண்களை குவித்த இவர் 1983 ஆம் ஆண்டு ஒருநாள் தொடரில் உலகக் கோப்பையை வென்ற போது இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார்.
அதன் பிறகு பல தனிப்பட்ட பின்னடைவுகளால் குடி போதைக்கு அடிமையான இவரை மீட்டுக் கொண்டு வர கபில்தேவ் சச்சின் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் பெரிதும் முயற்சி எடுத்தனர். ஆனால் அவர் மது போதையில் இருந்து வெளியில் வரவில்லை. இதனால் இவரது உடல் நிலையும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் உடல்நிலை மோசமாகி தானேயில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சை பிரிவில் வினோத் காம்ப்ளி அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் மூளையில் ரத்தம் உறைந்து இருப்பதால் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.