பங்களாதேஷில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பதவி விலகலின் பின்னர், பிரதமர் இல்லத்துக்குள் ஏற்பட்ட குழப்பம் சமூக வலைதளங்களில் வைரலானது. போராட்டக்காரர்கள் ஹசீனாவின் இல்லத்திற்குள் நுழைந்து, சோபாவில் படுத்துக்கொண்டு சாப்பிடுவது, கொள்ளையடிப்பது மற்றும் ஏரியில் நீந்துவது போன்ற வீடியோக்கள் சமூக ஊடக தளங்களில் பகிரப்பட்டன.

போராட்டக்காரர்கள் வீட்டு உணவுகளைச் சாப்பிடுவதும், வீட்டு உடமைகளைப் பயன்படுத்துவதும் , உடனே கிடைத்ததை எடுத்துச் செல்வதற்கும் வீடியோக்களில் தெரிகிறது. டாக்காவில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் அலமாரிகளைத் திறந்து, புத்தகங்கள் மற்றும் பழங்காலப் பொருட்களை எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறப்போவதாக வந்த தகவலின் பின்னர், பிரதமர் இல்லத்துக்குள் ஏற்பட்ட இந்த நிகழ்வுகள், நாட்டில் ஏற்பட்ட குழப்பத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளன.

“>

“>