நடப்பு ஐபிஎல் தொடரில் 11 போட்டிகளில் விளையாடிய மும்பை அணி 8 போட்டிகளில் தோல்வி அடைந்து பிளே ஆப் வாய்ப்பை இழந்துள்ளது. இந்நிலையில் வீரேந்திர சேவாக் மும்பை அணியின் தோல்வி குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, மும்பை அணியில் ஹர்திக் பாண்டியா மற்றும் டிம் டேவிட்டை கடைசியில் இறக்கிவிட்டு என்ன சாதித்தீர்கள். அவர்கள் எதிர்கொள்வதற்கு நிறைய பந்துகள் இருப்பினும் அவுட் ஆனார்கள். மும்பை அணியில் என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. பாண்டியா மற்றும் டேவிட் ஆகியோர்கள் 7 மற்றும் 8-வது இடத்தில் பேட்டிங் செய்வதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அவர்கள் முன்கூட்டியே களம் இறங்கினால் விரைவில் ஆட்டமிழக்கும் அளவிற்கு மோசமான வீரர்களா.? குஜராத் அணியின் கேப்டனாக இருந்தபோது ஹர்திக் பாண்டியா தொடர்ந்து 4-வது இடத்தில் விளையாடியுள்ளார். ஆனால் மும்பை அணியில் நடந்தது என்ன.? நான் மிகவும் குழப்பம் அடைந்துள்ளேன். பேட்டிங் தரவரிசை மாறியது தொடர்பாக மும்பை அணியின் வீரர்கள் விளக்கம் அளிக்க வேண்டும். இந்த அணியில் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் மீது தவறு இருக்கிறது. எனவே அவர்கள் மீது மும்பை நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் ஹர்திக் பாண்டியா மீது மும்பை அணி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேவாக் கூடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.