
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளின் பெருமை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
முதல் படை வீடு – திருப்பரங்குன்றம்
சூரபத்மனை வெற்றி கொண்ட பிறகு தெய்வானையை மணமுடித்து மனங்கோலத்தில் திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமான் காட்சி தருகிறார்.
இரண்டாம் படை வீடு – திருச்செந்தூர்
இந்த கடற்கரை ஓரத்தில் தான் சூரபத்மனை முருகப்பெருமான் அளித்ததாக கந்தபுராணம் கூறுகிறது. திருச்செந்தூர் தளம் குரு தளமாக விளங்குகிறது.
மூன்றாம் படை வீடு – பழனி
பழனியில் இருக்கும் முருகர் சிலை போகர் சித்தரால் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது. ஞானப்பழத்திற்காக தமயனுடன் நடந்த போட்டியில் தோற்ற ஆத்திரத்தில் தண்டாயுதபாணியாக பழனியில் முருகப்பெருமான் காட்சியளிக்கிறார். இங்கு அபிஷேகம் செய்யப்படும் பால், பஞ்சாமிர்தம், தீர்த்தம் போன்றவற்றை பிரசாதமாக எடுத்துக் கொண்டால் சகல நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.
நான்காம் படை வீடு – சுவாமிமலை
பிள்ளைகள் பெற்றோரை விட அறிவுடையவர்களாக இருப்பது அவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். அது மனிதர்களுக்கு மட்டுமல்லாது இறைவனுக்கும் பொருந்தும். சிவபெருமான் அவர்கள் தன் மகன் முருகனை குருவாக ஏற்று பிரணவ மந்திரத்தின் பொருளை கேட்க சீடனாக அமர்ந்து விளக்கத்தை கேட்ட இடம்தான் சுவாமிமலை. இங்கு முருகப் பெருமானை சிவகுருநாதன் என்று அழைப்பர்.
ஐந்தாம் படை வீடு – திருத்தணி
சூரபத்மனை வதம் செய்த பிறகு முருகன் தனது கோபத்தை தணித்துக் கொள்ள திருத்தணி சென்றதாக கூறப்படுகிறது. அதே போன்று வள்ளியை பிள்ளையாரின் உதவியுடன் முருகர் காதல் திருமணம் செய்து கொண்ட இடம் திருத்தணி தான்.
ஆறாவது படை வீடு – அழகர்மலை
அறுபடை வீடுகளில் கடைசியாக உள்ளது அழகர்மலை. இங்குதான் சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று அவ்வை பாட்டியிடம் முருகப்பெருமான் கேள்வி கேட்டார். மனித வாழ்விற்கு கல்வி மட்டும் போதாது இறையருளும் வேண்டும் என்பதை உணர்த்த இவ்வாறான திருவிளையாடல் முருகப்பெருமானால் நடத்தப்பட்ட இடம்தான் அழகர்மலை.