
முருக பக்தர்கள் மீது கை வைத்தால் நீங்கள் இருக்க மாட்டீர்கள் என்று அண்ணாமலை ஆவேசமாக பேசியுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, “தமிழகத்தில் கஞ்ச புத்தாக்கம் இருக்குது. இதற்கெல்லாம் காவல்துறையை பயன்படுத்த வேண்டுமா? அல்லது 350 பாஜகவினர் வீட்டிற்கு போய் கைது பண்ணி சிறையில் வைக்க போகிறீர்களா? உங்களுக்கு வெட்கமாக இல்லையா? அமைச்சர் சேகர்பாபு அவர்கள், ரகுபதி போன்றவர்கள் வீர வசனம் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். முருக பக்தர்கள் மீது கை வைத்தால் நீங்கள் இருக்க மாட்டீர்கள். எங்களுக்கும் தெரியும் உங்களை எப்படி அடக்க வேண்டும் என்று.
ஆன்மீக ரீதியாக கோர்ட் என்ன அனுமதி கொடுத்திருக்கிறார்களோ அதுதான் நடக்கிறது. அந்த இடத்திற்கு நான் போக கூட இல்லை. ஆகவே இரும்புக்கரம் என்ற வார்த்தை பயன்படுத்தி நீங்கள் கோபப்படுத்தினீர்கள் என்றால் அவ்வளவுதான். அமைச்சர் ரகுபதிக்கு சொல்கிறேன் இந்த மிரட்டல் உருட்டல் எல்லாம் திமுக காரன் கிட்ட இன்பநிதிக்கு போஸ்டர் அடிக்கிறவங்க கிட்ட போய் சொல்லு. தமிழகத்தில் பிரச்சனை உண்டாக்குவது திமுக. இத்தனை காலமாக சும்மா இருந்த திருப்பரங்குன்றம் பிரச்சனையை ஊதி பெரிதாகக்கியது யார்.? அங்கே போய் மாமிசம் சாப்பிட என்ன ரைட்ஸ் இருக்கு? அதெல்லாம் பாத்துகிட்டு நீங்க நடவடிக்கை எடுத்தீர்களா? என்று பேசியுள்ளார்.