தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். நடிகை நயன்தாரா தற்போது மண்ணாங்கட்டி, டெஸ்ட் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் இடையில் தற்போது மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் மீண்டும் நடிக்க இருக்கிறார்‌.

கடந்த 2022-ம் ஆண்டு ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் படத்தில் நயன்தாரா அம்மனாக நடித்து அசத்தியிருந்த நிலையில் அந்த படம் வெற்றி பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கும் நிலையில் அதில் அம்மனாக திரிஷா நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் நயன்தாரா தான் அம்மனாக நடிக்க இருக்கிறார் என்பதை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக வீடியோ ஒன்றையும் வெளியிட்ட நிலையில் அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.