உலகின் முதல் மூக்குவழி கொரோனா தடுப்பு மருந்து இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளது. கோவாக்ஸினை தயாரித்து வழங்கும் ஹைதராபாத் பாரத் பயோடெக் நிறுவனத்தினர், அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து “பிபிவி 154” எனும் பெயரில் மூக்கு வழியே செலுத்தக்கூடிய கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளனர். இதனை முதல், இரண்டு தவணைகளாக எடுத்துக் கொள்ளலாம்.

வேறு தடுப்பூசிகள் எடுத்துக் கொண்டவர்களும் பூஸ்டர் டோஸாக எடுத்துக் கொள்ளலாம். இந்நிலையில் இந்த மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்தை தமிழக அரசுக்கு இலவசமாக வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.