2022 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் தீபிகா என்பவர் தனது கணவருடன் கர்நாடகாவில் இருந்து பெங்களூருக்கு தனியார் செயலி ஒன்றில் பேருந்தை புக் செய்து அந்தப் பேருந்தில் சென்றுள்ளார். அப்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த ராஜா ராணி சீரியலில் பங்கேற்பதற்காக சென்றுள்ளார். ஆனால் பேருந்தில் ஸ்லீப்பர் கோச்சில் அவரை மூட்டைப்பூச்சி கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரால் ராஜா ராணி சீரியலில் பங்கேற்க முடியவில்லை.

இதனையடுத்து தீபிகா நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்ற வந்த நிலையில் பேருந்து நடத்துனர் மற்றும் பேருந்தை செயலியில் சேர்த்தவர் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு அபராத கட்டணம், டிக்கெட் பணம், வழக்கு தொடர்ந்த செலவுகள் என சேர்த்து மொத்தம் 1,29,000 ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.