சென்னையில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட மூத்த குடிமக்களுக்கு இலவச கண் பரிசோதனை சிகிச்சை வழங்க அகர்வால் மருத்துவமனை முன்வந்துள்ளது. இதற்காக 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் 9594924048 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம் என்றும் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே இலவச சிகிச்சை வழங்கப்படும் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே பாதிக்கப்பட்டவர்கள் இதனை பயன்படுத்திக் கொண்டு பயன்பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.