சேலம் மாவட்டம் மல்லூர் அருகே நிலவாரப் பட்டி ஏலக்கரடு பகுதியில் ராஜா (30) ரோஷினி(22) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் நிதர்ஷன் என்ற குழந்தை இருந்தது. கட்டிட மேஸ்திரி ஆக இருக்கும் ராஜா மற்றும் ரோஷினி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில் ரோஷினி மணமடைந்த நிலையில் காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று காலை ராஜா வழக்கம்போல வேலைக்கு சென்று விட்ட நிலையில் தனது குழந்தையுடன் ரோஷினி வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்த நிலையில் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டை விட்டு வெளியே வராததால் அக்கம் பக்கத்தினர் மாலை 5 மணி அளவில் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தனர்.

அப்போது மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் ரோஷினி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அருகிலேயே குழந்தையும் இறந்து கிடந்துள்ளது. உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரோஷினி மற்றும் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு போலீசார் நடத்திய விசாரணையில் ரோஷினி குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ரோஷினியின் கணவர் ராஜாவை கைது செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணம் ஆகி 3 ஆண்டுகளே ஆகும் நிலையில் குழந்தையை கொன்று தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.