மூளையை தின்னும் அமீபா வைரஸ் காரணமாக கேரளாவில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தேங்கியிருக்கும் நீரில் குளிப்பதை பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் தவிர்க்க வேண்டும், நீர்நிலைகள், குளங்கள் மற்றும் ஏரிகளில் சுற்றுச்சூழல் சுகாதாரம் பேணப்பட வேண்டும், இந்த நோய் பாதிப்பு அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அனைத்து மாவட்டங்களுக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதே சமயம் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் எழுதிய கடிதத்தில், அமிபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் என்ற மூளையை அறிக்கும் நோய் தொற்று தொடர்பான உயிரிழப்புகள் கேரளாவில் நிகழ்ந்ததை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.