கேரள மாநிலத்தில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது அமீபா தொற்றுக்கு 14 வயது சிறுவன் பலியாகி உள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த மிருதுல் என்ற சிறுவன் அசுத்தமான குளத்தில் குளித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அமீபிக் காய்ச்சலால் சிறுவன் பாதிக்கப்பட்டதால் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தான். இந்த தகவலை கேரள மாநில சுகாதாரத்துறை உறுதிப்படுத்தி உள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த மூன்று மாதங்களில் இது மூன்றாவது மரணம் என்பது அதிர்ச்சி அளிக்கிறது.