தமிழ்நாடு காவல்துறையில் வேலை வாய்ப்புக்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது . காவல் சார்பு ஆய்வாளர்( தாலுகா, ஆயுதப்படை) பணியிடங்களை  நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 1299 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 20 முதல் 30 வயதுக்குள் இருப்பவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

மாத ஊதியமாக 36 ,900 முதல் 1,16,600 வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இணையவழி மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் தேதியானது ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகிறது. மே -3 ஆம் தேதி விண்ணப்பிப்பதற்கு கடைசி நாள் ஆகும். மேலும் விண்ணப்பதாரர்கள் www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.